Tuesday, 31 March 2015

அன்பு ஆயிரம் வகையுண்டு நீங்கள் எந்த வகையில் இன்று ?...?...?

அன்பு என்ற அழகு நிறைந்த வார்தைக்கு ஆயிரம் மடங்கு அபார சக்தியுண்டு....                                                                                               (அபூ ஹுசைபா)

  உலகில் அன்பு என்னும் கருணையை அல்லாஹ் நம்மிடம் தந்ததின் வெளிப்பாடே இன்று ஒருவர் மற்றவருடன் இணைந்து வாழ வேண்டும் என்பதற்குதான் .
அன்புள்ளம் படைத்த உள்ளங்களில்தான் அல்லாஹுவும்இருக்க விரும்புகிறான்.காரணம் அல்லாஹ் மிகவும் அன்பானவன் .அவனின் அன்பிற்கு அளவே இல்லை எல்லையும் இல்லை .
எனவேதான் என்னுடயை கோபத்தை அன்பு மிகைத்து விட்டது  என அல்லாஹ் தன்னை பற்றி குறிப்பிட்டு சொல்வான்.
அன்பு இரக்கம்.போன்ற நல்ல செயல்கள் அல்லாஹ்வின் தனிப்பெரும் சிறப்பு பெயர்களின் வெளிப்பாடாகும் அந்த குணங்களை  நம்மிடம் வெளிப்படுத்திட  நாம் முயற்சிக்க வேண்டும்.
அன்பில் சுயநலம் ஒரு போதும் நம்மிடம் இருந்திட கூடாது அன்பை காட்டி .பிறரை அடக்கி ஆழ்வதும் அடிமை படுத்துவதும் .திறமையன நினைத்து சிலர் பலரை உலகில் ஏமாற்றி வாழ்கிறார்கள்.
அது உங்களை அறியாமை என்னும் பெரும் சாபக்கேட் டிற்கு கண்களை திறந்த நிலையிலேயே அழைத்தது சென்று மூடுகுழியில் போட்டு மண்ணை   அள்ளி தலையில் போடும் செயல் என இப்பொழுது நீங்கள் உணர முடியாது.
அன்பிற்கு நேர் எதிரான சொல்தான் ஆதிக்கம்.அன்பால் ஆதிக்கம் செலுத்துவதும் அதிகாரத்தால் பிறரை அடக்கி ஆழ்வதும் .நினைப்பதும் அல்லாஹ்வின் பெரும் சாபத்திற்கும் மனிதர்களிடம் கேவலத்திற்கும் .உங்களை ஏற்படுத்திவிடும்.
ஆணவம் பெருமை எல்லாம் அல்லாஹ்விற்குரியது.அவனின் உரிமைகளை நாம் கையில் எடுப்பது ஷைத்தானின் முடிவு போன்றதாகிவிடும்.
எனவே மிக கவனமாக நம்முடைய வாழ்வை நகர்த்தி செல் வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் .
அல்லாஹ்வின் சிறப்பு குனங்கலான அன்பு.அறிவு. பெருமை.போன்றவற்றில் இருக்கும் அன்பை.அறிவை.நாம் பெருக்கிடச்செய்ய வேண்டும்.அதில் ஆதிக்கம்.கர்வம்.ஏற்பட்டு விட்டால்.அல்லாஹ்விடம் நேருக்கு நேராக போரிட தயார் ஆகுவதை போன்ற
தாகிவிடும்.
இந்த நிலை ஷைத்தானின் நிலையாகும்.தனது ஆணவத்ததாலும் .அடக்கி ஆள வேண்டும் என்ற திமிரான செயலாலும்.பிறரை விட தன்னுடைய சிறப்பு மேன்மையுடையது என்ற கர்வமும்.அவனை அல்லாஹ்வின்.சாபத்திற்குரிய கேவலத்தை ஏற்படுதிவிட்டது.
இன்று பெரும்பாலான  மக்களின் உள்ளங்களில் பெருமை.ஆதிக்க உணர்வு.அடி மனதில்லை ஆழமாக கரை படிந்து கிடக்கிறது.
உடலின் மீது அழுக்கு இருந்தாலும் அது நோயை கொன்டு வரும்.உள்ளத்தின் உள்ளே அழுக்கு இருந்தாலும்.அதுவும் பெரும் நோயை கொண்டு வரும்.
இது இரண்டையும் நீங்கள் சுத்தம் செய்யாத வரையில் நீங்கலும்.இழிவானவர்களே.என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.
அன்பான வாழ்வை தேர்வு செய்யுங்கள் அறிவு நிறைந்த அடக்கமான பழக்கங்களை நேசியுங்கள் .ஆணவம்.பெருமை.ஆதிக்க உணர்வுகளை தவிர்த்து விடுங்கள் .
இந்த நல்ல குணங்கல்தான்   உங்களை சிறப்பு படுத்தும்.மற்ற குணங்கள்  உங்களை சிறுமைபடுத்தி விடும்.என்ற வரிகளை மனதில் பதிந்து வையுங்கள்.
அல்லாஹ் நாம் அனைவருக்கும் அழகாண வாழ்வை தேர்ந்து எடுக்கும் அடக்கமான அறிவான அன்பான வாழ்வை வழங்குவனாக ............ஆமின்         
                                                                 




                          


Monday, 30 March 2015

அனைத்துக்காரியங்களுக்கும் அல்லாஹ்வையே நாடுங்கள்

அல்லாஹ்வின் அருள் பெற்ற நம் காரியங்கள் அனைத்தும்  நிறைவாகவே நிறைவேறும்..
[அபூஹுசைபா]

 உலகில் வாழும் படைப்பினங்களில்மனிதர்கள் மட்டுமே எதையும் செய்யும் தனிப்பெரும்ஆற்றலைப்பெற்றவர்களாக வாழ்கிறார்கள். 
மனிதர்கள் மட்டுமே எதையும்செய்யும்தனிப்பெரும்ஆற்றலைப்பெற்றவர்களாக வாழ்கிறார்கள்.
தன்னுடைய கடுமையான உழைப்பாலும் விடாமுயற்சியாலும் தோல்வியை கண்டு அஞ்சாமல் வெற்றியை நோக்கி பயணிப்பவர்கள் அபாரசாதனைகளையும் எதையும் திறம்பட சாதிப்பவர்களாகவும் உலகில் வலம் வருவார்கள்.

இதன் காரணம் மனிதனை அல்லாஹ் உலகில் தன்னுடைய பிரதிநிதியாக படைத்து மற்ற படைப்பினங்களை விட எல்லா வகையுளும் சிறப்பாகவே படைத்துள்ளான்  என்பதேயாகும்.

எனவேதான் மற்ற எந்த படைப்பினகளும் செய்ய முடியாத வேளைகளையும் சிந்தனை திறமைகளையும் மனிதன் நிறைவாகவே சிந்தித்து செயலால் வெற்றியும் பெறுகிறான்        

நம்முடைய காரியங்களில் முழுமையான வெற்றி என்பது நாம் செய்யும் உலக காரியங்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்துசெய்யல்படுவதேஆகும்                                                     

அல்லாஹ்வின் உதைவியின்றி எந்த காரியத்தையும் நம்மால் நிறைவாக செயல்படுதிட முடியாது

இஸ்லாம் நாம் செயல்படும் ஒவ்வொறு செய்யலிலும் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்தே செயல்பட வேண்டும் என வழியுறுத்துகிறது


மனிதர்கள் தன்னுடைய ஆற்றல் மற்றும் அனுபவத்தையும் நம்பி எந்த காரியத்தையும் செயல்படுத்துவது வெற்றிக்குரிய முழுமையான வழிகளை அமைத்துவிடது


நமக்கு எவ்வளவோ திறமைகளும் வசதி வாய்ப்புகளும் இருந்தும் நாம் கட்டளையிட்டால் மின்னல் வேகத்தில் வேலைகளை செய்து முடித்திடும் பணியாளர்கள் இருந்தும் எத்தனையோ காரியங்களை செய்து முடிக்காமல் சிரம்மபட்டு இருப்போம்

அல்லாஹ்வின் உதைவியின்றி எந்த காரியத்தையும் நம்மால் நிறைவாக செயல்படுதிட முடியாது

இஸ்லாம் நாம் செயல்படும் ஒவ்வொறு செய்யலிலும் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்தே செயல்பட வேண்டும் என வழியுறுத்துகிறது


மனிதர்கள் தன்னுடைய ஆற்றல் மற்றும் அனுபவத்தையும் நம்பி எந்த காரியத்தையும் செயல்படுத்துவது வெற்றிக்குரிய முழுமையான வழிகளை அமைத்துவிடது


நமக்கு எவ்வளவோ திறமைகளும் வசதி வாய்ப்புகளும் இருந்தும் நாம் கட்டளையிட்டால் மின்னல் வேகத்தில் வேலைகளை செய்து முடித்திடும பணியாளர்கள்இருந்தும் எத்தனையோகாரியங்களை செய்து முடிக்காமல் சிரம்மபட்டு இருப்போம்
   

எந்த காரியத்தை செய்தாலும் அல்லாஹ்வின் உதவியை முழுமையாக நம்பி செயல்பட வேண்டும் மனிதர்களாகிய நமக்கு திறமைகளை அவனே நமக்கு வழங்கியுள்ளான்


இந்த உண்மைகளை மனதில் நாம் பதிந்து வைத்துக்கொண்டால் வாழ்க்கையில் நாம் எடுக்கும் எல்லாகாரியங்களிலும் மிகவும் எளிதில் வெற்றி பெற முடியும்


எதையும் நான் செய்து முடிப்பேன் என்னால் முடியாது என்று எந்த செயலையும் சொல்ல முடியாது என மனதளவில் கர்வம் பெருமை எற்பட்டுவிட்டால் நம்முடைய காரியங்கள் அனைத்துமே சிதைந்து போய்விடும்


நம்மையும் நம்முடைய காரியங்களையும் இயக்குபவன் அல்லாஹ்தான் அவனின் அனுமதியின்றி உலகில் எதுவுமே இயக்கம் பெறுவதில்லை மரத்திலிருந்து ஒரு இலை உதிர்வதும் அல்லாஹ்வின் கட்டளையே என அல்லாஹ்வின் பெரும் ஆற்றலை நமக்கு கற்று தந்துள்ளார்கள் நபி முஹம்மத் [ஸல் ]அவர்கள் அல்லாஹ்வின் உதைவியின்றி நமக்கு எதையும் செயல்படுத்த முடியாது என்பதை நபி முஹம்மது [ஸல் ]அவர்கள் மூலமாக அல்லாஹ்வும் உணர்த்தி இருக்கிறான் 


ஒரு முறை நபி [ஸல்]அவர்களின் மீது கடுமையான பகைமை உணர்வுகளோடு வாழ்ந்த யூதர்கள் சில மனிதர்களை தூண்டிவிட்டு நபி முஹம்மது [ஸல் ]அவர்களிடம் குகை வாசிகளை பற்றி கேளுங்கள் அவர் உண்மையான இறை தூதராக இருந்தால் பதில் தெரியும்

இல்லை என்றால் அவர் பொய்யர் என ஏவிவிட்டார்கள் அதை போன்று நபி [ஸல் ] அவர்களிடம் கேள்வியும் கேக்கப்பட்டது அதற்கு நபியவர்கள் நாளை பதில் சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்

உடனே அல்லாஹ் நபி [முஹம்மது [ஸல்]அவர்கள் மீது இறை வசனத்தை இறக்கிவிட்டான் 


நபியே எந்த விசயத்தை பற்றியும் அதனை நாளை நான் நிச்சயமாக செய்திடுவேன் என்று சொல்ல வேண்டாம் இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் நாட்டினால்  அதனை நாளைக்கு செய்வேன் என்று கூறுங்கள்

இறைவசனம்
  

அதன் பிறகு குகை வாசிகளை பற்றி எதிரிகளுக்கு அல்லாஹ்வின் உடைவியோடு பதிலும் சொன்னார்கள் எனவே நாம் எந்த காரியத்தை செய்ய நினைத்தாலும் அல்லாஹ்வின் உடைவியை முழுமையாக் நம்பி செயல்பட வேண்டும் என்பதுதான் இவ்வசனமும் நமக்கு உணர்த்துகிறது என்ற உண்மையை வாழ்வில் புரிந்து வாழ்வோமாக ஆமின்                                                       


                                  


    


                                                    

Saturday, 28 March 2015

பணம் சம்பாதிப்பது எப்படி?



அளவுக்கு அதிகமான பணம் உன்னை சிலநேரம் பைத்தியக்காரனாகவும் பல நேரம் முட்டாளாகவும் மாற்றிவிடும்....
-(அபூஹுசைபா)


IZZATH NOORI Copyright © . Designed by Ourblogtemplates.com | Seo By Islamic Blogger Template

Back to TOP