Tuesday, 31 March 2015

அன்பு ஆயிரம் வகையுண்டு நீங்கள் எந்த வகையில் இன்று ?...?...?

அன்பு என்ற அழகு நிறைந்த வார்தைக்கு ஆயிரம் மடங்கு அபார சக்தியுண்டு....                                                                                               (அபூ ஹுசைபா)

  உலகில் அன்பு என்னும் கருணையை அல்லாஹ் நம்மிடம் தந்ததின் வெளிப்பாடே இன்று ஒருவர் மற்றவருடன் இணைந்து வாழ வேண்டும் என்பதற்குதான் .
அன்புள்ளம் படைத்த உள்ளங்களில்தான் அல்லாஹுவும்இருக்க விரும்புகிறான்.காரணம் அல்லாஹ் மிகவும் அன்பானவன் .அவனின் அன்பிற்கு அளவே இல்லை எல்லையும் இல்லை .
எனவேதான் என்னுடயை கோபத்தை அன்பு மிகைத்து விட்டது  என அல்லாஹ் தன்னை பற்றி குறிப்பிட்டு சொல்வான்.
அன்பு இரக்கம்.போன்ற நல்ல செயல்கள் அல்லாஹ்வின் தனிப்பெரும் சிறப்பு பெயர்களின் வெளிப்பாடாகும் அந்த குணங்களை  நம்மிடம் வெளிப்படுத்திட  நாம் முயற்சிக்க வேண்டும்.
அன்பில் சுயநலம் ஒரு போதும் நம்மிடம் இருந்திட கூடாது அன்பை காட்டி .பிறரை அடக்கி ஆழ்வதும் அடிமை படுத்துவதும் .திறமையன நினைத்து சிலர் பலரை உலகில் ஏமாற்றி வாழ்கிறார்கள்.
அது உங்களை அறியாமை என்னும் பெரும் சாபக்கேட் டிற்கு கண்களை திறந்த நிலையிலேயே அழைத்தது சென்று மூடுகுழியில் போட்டு மண்ணை   அள்ளி தலையில் போடும் செயல் என இப்பொழுது நீங்கள் உணர முடியாது.
அன்பிற்கு நேர் எதிரான சொல்தான் ஆதிக்கம்.அன்பால் ஆதிக்கம் செலுத்துவதும் அதிகாரத்தால் பிறரை அடக்கி ஆழ்வதும் .நினைப்பதும் அல்லாஹ்வின் பெரும் சாபத்திற்கும் மனிதர்களிடம் கேவலத்திற்கும் .உங்களை ஏற்படுத்திவிடும்.
ஆணவம் பெருமை எல்லாம் அல்லாஹ்விற்குரியது.அவனின் உரிமைகளை நாம் கையில் எடுப்பது ஷைத்தானின் முடிவு போன்றதாகிவிடும்.
எனவே மிக கவனமாக நம்முடைய வாழ்வை நகர்த்தி செல் வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் .
அல்லாஹ்வின் சிறப்பு குனங்கலான அன்பு.அறிவு. பெருமை.போன்றவற்றில் இருக்கும் அன்பை.அறிவை.நாம் பெருக்கிடச்செய்ய வேண்டும்.அதில் ஆதிக்கம்.கர்வம்.ஏற்பட்டு விட்டால்.அல்லாஹ்விடம் நேருக்கு நேராக போரிட தயார் ஆகுவதை போன்ற
தாகிவிடும்.
இந்த நிலை ஷைத்தானின் நிலையாகும்.தனது ஆணவத்ததாலும் .அடக்கி ஆள வேண்டும் என்ற திமிரான செயலாலும்.பிறரை விட தன்னுடைய சிறப்பு மேன்மையுடையது என்ற கர்வமும்.அவனை அல்லாஹ்வின்.சாபத்திற்குரிய கேவலத்தை ஏற்படுதிவிட்டது.
இன்று பெரும்பாலான  மக்களின் உள்ளங்களில் பெருமை.ஆதிக்க உணர்வு.அடி மனதில்லை ஆழமாக கரை படிந்து கிடக்கிறது.
உடலின் மீது அழுக்கு இருந்தாலும் அது நோயை கொன்டு வரும்.உள்ளத்தின் உள்ளே அழுக்கு இருந்தாலும்.அதுவும் பெரும் நோயை கொண்டு வரும்.
இது இரண்டையும் நீங்கள் சுத்தம் செய்யாத வரையில் நீங்கலும்.இழிவானவர்களே.என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.
அன்பான வாழ்வை தேர்வு செய்யுங்கள் அறிவு நிறைந்த அடக்கமான பழக்கங்களை நேசியுங்கள் .ஆணவம்.பெருமை.ஆதிக்க உணர்வுகளை தவிர்த்து விடுங்கள் .
இந்த நல்ல குணங்கல்தான்   உங்களை சிறப்பு படுத்தும்.மற்ற குணங்கள்  உங்களை சிறுமைபடுத்தி விடும்.என்ற வரிகளை மனதில் பதிந்து வையுங்கள்.
அல்லாஹ் நாம் அனைவருக்கும் அழகாண வாழ்வை தேர்ந்து எடுக்கும் அடக்கமான அறிவான அன்பான வாழ்வை வழங்குவனாக ............ஆமின்         
                                                                 




                          


No comments:

Post a Comment

IZZATH NOORI Copyright © . Designed by Ourblogtemplates.com | Seo By Islamic Blogger Template

Back to TOP