Sunday, 5 April 2015

அடக்கம்மாக வாழ்வதே அழகான வாழ்க்கை............

 அடக்கமாக வாழ கற்றவர்களே வாழ்க்கையின்
 உயரத்தை எளிதாக அடைவார்கள்...[அபூஹுசைபா..... 

அடக்கம் என்பதில்தன் நாம் வாழ்வின் வெற்றியின் ரகசியம் அடங்கியுள்ளது.அடக்கமாக இருப்பவர்களை பார்த்து அவரின் திறமைகளை. சாதரணமாக எடை போட்டு ஏமாந்தவர்கள் அதிகம் உண்டு.
அடக்கம். பணிவு.ஒழுக்கம்.நற்பண்பு.போன்ற வாழ்க்கையின் முறையை சரியாக யார் கடைபிடிப்பர்களோ.அவர்களிடம் பிற மனிதர்களின் அன்பும் மதிப்பும் தானாகவே தேடி வரும்.
எல்லாம் இருந்தும் அடக்கமாக இருக்கும் நூலகத்தை போல.அமைதியாகவும் தெளிவாகவும்.வாழ்கை பயணத்தை தொடர்பவர் யாரும் எதிர்பார்க்க முடியாத உயரத்தை அடைகிறார்கள்
.
இவர்களுக்கு நேர் மாற்றமானவர்களுக்கு.சிறு பதவிகளும்.பட்டங்களும் திறமைகலும்.செல்வங்களும்.அல்லது இதில் ஏதாவது ஒன்று கிடைத்து விட்டால்.
உலகில் தனக்கே எல்லாம் கிடைக்கப்பெற்றது போன்று.மூட நம்பிக்கையுடன்.பொய்யான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்து.
பிறரை ஏமாற்றி வாழ்கை நடத்துவதும்.
எனக்கே எல்லாம் தெரியும் என்று பாசாங்கு செய்து.உலகில்பவனி வர நினைப்பது.பூனை தனது கண்களை மூடிக்கொன்டு உலகமே இருளாக இருக்கிறதே என்று நினைக்கும் கதையைப் போன்றதாகும்.
இந்த என்னங்கள் ஷைத்தானின் குணகங்கலாகும் இவர்களின் வாழ்கை முறை பரிகாசத்துககுரியது வெறுக்கப்பட வேண்டியவையாகும்.
அடக்கமே உருவான மனிதர்களின்.வாழ்வினை நாம் உற்று நோக்கி பார்த்தால்.அவர்களிடம் அழகான பண்புகளும்.அறிவார்ந்த துணிவும் அடங்கி இருக்கும்.
இது போன்ற நல்ல பண்பான செயல்கள் இருப்பவர்கள்தான்.வாழ்வின் உயரத்தையும்.மக்களின் அன்பையும் மரியாதையும் பெறுகிறார்கள்.
 
புகழுக்காக.பெருமைக்காக.அகம்பாவம்.ஆணவம் நிறைந்த குணத்துடன்
செயல் படுபவர்கள் செய்தானை போல இழிவாக்கப்படுவார்கள்.ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் [ரலி]சொல்கிறார்கள் ஆணவ குணத்துடன் செயல் பட்ட ஷைத்தான் இறைவனுக்கு மாறு செய்வதற்கு முன்பு வரை. வானவர்களுடன் சேர்ந்து அவர்களில் ஒருவனாக இருந்தான்.அப்பொழுது அவனின் பெயர் அஸாஸீல்.
அவன் பூமியில் வசித்து வந்தபோது.வணக்க வழிபாடுகளில்.வானவர்களை மிஞ்சியவனாகவும்.கல்வி அறிவில் அவர்களை மிகைத்தவனாகவும்இருந்தான்.

இந்த குணமே அவனை ஆணவம்.மற்றும் தான் பெரியவன் என்ற அகம்பாவத்தையும் ஏற்படுத்தியது.அந்த ஆணவக்குனம்.அன்று முதல் இன்று வரை.உலகம் உள்ள வரை இறைவன்னாலும்.அனைத்து படைபுகளாலும் வெறுக்கப்பட்டவனாக மாற்றி விட்டது.
ஷைத்தானின் நிலையை பற்றி இறைவன் கூறும்போது.

 وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ 

 நீங்கள் ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என்று நாம் வானவர்களிடம் கூறியபோது
அங்கிருந்த இப்லீஷைத் தவிர மற்ற அனைவரும் சிரம்பணிந்தனர்.அவனோ கர்வம் கொண்டு மறுத்து விட்டான் இறை மறுப்பாளர்களில் ஒருவனாக அவன் மாறி விட்டான் [இறைவசனம் 2:34] 

இறைவன் மனிதனுக்கு அதிகமான அருட்கொடைகளை கொடுத்துள்ளான்.அவை அனைத்தையும் பெற்ற நாம் அடக்கமாகவும்.
நன்றி உணர்வுகளோடும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லை என்றால் நமக்கு கிடைத்த அருட் கொடைகளே.நமக்கு பெரும் சோதனையாக மாறிவிடும்.
கல்வி.செல்வம்.பதவி.அழகு.பிள்ளைகள்.வியாபாரம் இது போன்ற அனைத்தும்
நாம் முயற்சியால்.திறமையால்தான் கிடைத்தது.என ஆணவக்குணம் வட்டு விட்டால் அது அல்லாஹ்வின் கோபத்திற்கும்.சாபத்திற்கும். நாம் அழிவிற்கும்.காரணமாகி விடும்.
தற்பெருமையுடன்.என்னை போன்று எவருமில்லை.என்று மார்தட்டியவர்களும்.கர்வம் கொன்டு அடக்கமாக இருப்பதை போன்று பாசாங்கு செய்தவர்களும்.அவமானப்பட்டு இழிவான நிலையை அடைந்தார்கள் என்பதை.அவர்களின் வரலாறுகள் இன்றும் நமக்கு நினைவூட்டுகின்றன.
நபி முஹம்மத்[ஸல்]சொன்னார்கள் யாருடைய உள்ளத்தில் கடுகளவு ஆணவம் உள்ளதோ அவர் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார் ,[நூல் முஸ்லிம்]
இந்த எச்சரிக்கை வரிகள் நம் வாழ்க்கையயும்.ஆணவ குணங்களையும்.சரி
செய்வதற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வரிகளாகும்.நம்முடைய உள்ளதிலும்.
தேற்றதிலும்.நம்மைசீரழிக்கும் நாசமான தீய குணகங்கள்.இருக்குமேயானால்
இன்றே இறைவனிடம் மண்டியிட்டு.நம் உள்ளதை தூய்மைப்படுத்தி விடுவோம்.
இறைவன் நம் வாழ்கையை தூய்மை படுத்தி விடுவான் இல்லை என்றல் நாம் துயரப்பட்டு இழிவாக்கப்பட்டு துயரப்படுவது.நிச்சயம்.
இறைவா எங்களிடம் அழகான அடக்கமான நற்குணமுடைய வாழ்வை கொடுப்பாயாக.ஆனவக்குனங்களை விட்டும் பாது காத்து பக்குவமான குனகங்களை வெளிப்படுத்தி எங்கள் செயல்களை முழுதாக ஏற்று கொள்வாயாக எங்களுக்கு உதைவி புரிவாயாக ஆமின் ஆமின் ஆமின் ....



IZZATH NOORI Copyright © . Designed by Ourblogtemplates.com | Seo By Islamic Blogger Template

Back to TOP